பிபிஎல் போட்டியிலிருந்து வெளியேறுவேன்: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை மிரட்டும் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் ரஷித் கான். 
பிபிஎல் போட்டியிலிருந்து வெளியேறுவேன்: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை மிரட்டும் ரஷித் கான்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய அணிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரபல வீரர் ரஷித் கான். 

மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. 

இதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பிரபல வீரர் ரஷித் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

மார்ச் மாதம் விளையாடவிருந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. என் நாட்டுக்காக விளையாடுவதில் நான் பெருமை கொள்கிறேன். உலக அளவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு சங்கடத்தை அளிப்பதாக இருந்தால் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் சங்கடத்தையும் நான் விரும்பவில்லை. எனவே வருங்காலத்தில் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ட்வீட்டில், கிரிக்கெட் தான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. அரசியலைத் தள்ளி வையுங்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிபிஎல் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் ரஷித் கான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com