சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இந்தியா டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு, இரு பிரபல வீரர்கள் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2023, 11:38 am IST

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொடருக்குப் பிறகு கேன் வில்லியம்சன், டிம் செளதி ஆகிய இருவரும் ஓய்வு எடுத்துக்கொள்வதால் மிட்செல் சான்ட்னர் இந்திய டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கைல் ஜேமிசன், மேட் ஹென்றி, ஆடம் மில்ன், பென் சியர்ஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. பென் லிஸ்டர் என்கிற 27 வயது வேகப்பந்து வீச்சாளர் முதல்முறையாக நியூசி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டாம் லதம் கேப்டனாகச் செயல்படவுள்ளார். இதற்கு முன்பு 11 டி20 ஆட்டங்களில் நியூசிலாந்தின் கேப்டனாக சான்ட்னர் செயல்பட்டுள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடும் ஒருநாள் தொடர் ஜனவரி 18 அன்றும் டி20 தொடர் ஜனவரி 27 அன்றும் தொடங்கவுள்ளன.

நியூசிலாந்து அணி

மிட்செல் சான்ட்னர், (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளவர், கான்வே, ஜகோப் டஃபி, லாகி ஃபர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிளிப்ஸ், மைக்கேல் ரிப்பன், ஹென்றி ஷிப்லி, இஷ் சோதி, பிளைர் டிக்னர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.