
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர், இன்று முதல் தொடங்குகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், அக்ஷர் படேல் ஆகியோர் இடம்பெறவில்லை. சொந்தக் காரணங்களுக்காக ராகுல், அக்ஷர் படேல் விலகியுள்ளார்கள். ஷ்ரேயஸ் ஐயருக்குக் காயம். இதனால் ஹார்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள். ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ், தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்கள். நியூசிலாந்து அணியில் வில்லியம்சன், செளதி, சோதி ஆகியோர் இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.