2-வது ஒருநாள்: 108 ரன்களுக்குச் சுருண்ட நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
2-வது ஒருநாள்: 108 ரன்களுக்குச் சுருண்ட நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் இல்லை.

முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனை போல்ட் செய்தார் ஷமி. பெரிய சரிவுக்கான தொடக்கமாக இது இருந்தது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள சிராஜ், ஹென்றி நிகோல்ஸை 2 ரன்களில் வீழ்த்தினார். டேரில் மிட்செல் 1 ரன்னில், பந்துவீசிய ஷமியிடமே கேட்ச் கொடுத்தார். அதேபோல கான்வேவும் பாண்டியாவின் பந்துவீச்சில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கடினமான கேட்சைப் பிடித்து பாராட்டுகளைப் பெற்றார் பாண்டியா. 17 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் எடுத்த நியூசி. கேப்டன் டாம் லதமின் விக்கெட்டை ஷர்துல் தாக்குர் வீழ்த்தினார்.

10.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து.

6-வது மற்றும் 7- விக்கெட்டுக்கு தலா 40 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் நியூசிலாந்து பேட்டர்களால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் போனது. கிளென் பிலிப்ஸ் 36, பிரேஸ்வெல் 22, சான்ட்னர் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள். இறுதியில், நியூசிலாந்து அணி, 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி 3, பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். சிராஜ், தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com