2-வது ஒருநாள்: 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து!

ஷமி, சிராஜின் அற்புதமான பந்துவீச்சினால் முதல் 5 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்து தடுமாறுகிறது நியூசிலாந்து அணி.
2-வது ஒருநாள்: 15 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஷமி, சிராஜின் அற்புதமான பந்துவீச்சினால் முதல் 5 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்து தடுமாறுகிறது நியூசிலாந்து அணி.

ராய்பூரில் 2-வது ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் இல்லை.

முதல் ஓவரிலேயே ஃபின் ஆலனை போல்ட் செய்தார் ஷமி. பெரிய சரிவுக்கான தொடக்கமாக இது இருந்தது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள சிராஜ், ஹென்றி நிகோல்ஸை 2 ரன்களில் வீழ்த்தினார். டேரில் மிட்செல் 1 ரன்னில், பந்துவீசிய ஷமியிடமே கேட்ச் கொடுத்தார். அதேபோல கான்வேவும் பாண்டியாவின் பந்துவீச்சில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். கடினமான கேட்சைப் பிடித்து பாராட்டுகளைப் பெற்றார் பாண்டியா. 17 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன் எடுத்த நியூசி. கேப்டன் டாம் லதமின் விக்கெட்டை ஷர்துல் தாக்குர் வீழ்த்தினார்.

10.3 ஓவர்களில் 15 ரன்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து. அந்த அணி 15 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com