ஐசிசி டெஸ்ட் போட்டியின் 2022-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார்.
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணியின் பேட்டிங்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும் விதம் அதிரடியாக மாறியுள்ளது. முன்பு இருந்த இங்கிலாந்து அணியா இது? என்ற கேள்வி உருவாகும் அளவுக்கு அவர்களது பேட்டிங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பெரிய ஷாட்களை அதிரடியாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் நபராக அவர் மாறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதும் இதில் அடங்கும். அணியின் கேப்டனாக அணியை வழிநடத்துவதில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிக்க: முதல் நாளிலேயே வசூலில் சதமடித்த ஷாருக் கானின் பதான்!
இந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ் 2022-ஆம் ஆண்டின் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் என அறிவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
2022 -ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் 870 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 36.25 ஆகும். அவரது ஸ்டிரைக் ரேட் 71.21 ஆகும். அவர் கடந்த ஆண்டு இரண்டு சதங்களை விளாசியுள்ளார். அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் அடித்த 103 ரன்கள் சிறப்பானதாகும். அதே போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அந்த தொடர் முழுவதையும் சேர்த்து அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும், அவர் 2022-ஆம் ஆண்டு முழுவதிலும் டெஸ்ட் போட்டிகளில் வெறும் 26 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பென் ஸ்டோக்ஸ் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்

தடைகள் தகரும் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை

பேரம்பாக்கம் ஊராட்சியில் ரூ. 2.50 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி வைப்பு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

