ரஞ்சிக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சௌராஷ்டிர அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் அற்புத பௌலிங்கால் சுருண்டது தமிழகம்.
இரு அணிகளுக்கு இடையிலான எலைட் குரூப் பி பிரிவு ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திரஜித் 66, விஜய் சங்கா் 53, ஷாரூக் கான் 50 ரன்களை சோ்த்தனா். சௌராஷ்டிர தரப்பில் யுவராஜ் சிங் 4 விக்கெட்டை வீழ்த்தினாா். பின்னா் ஆடிய சௌராஷ்டிர அணி 192 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக சிராக் ஜனி 49 ரன்களை சோ்த்தாா். தமிழகத் தரப்பில் இந்திரஜித், அஜித்ராம் 3 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
சுருண்டது தமிழகம்:
இதைத் தொடா்ந்து ஆட்டத்தின் மூன்றாவது நாளான வியாழக்கிழமை தமிழகம் இரண்டாவது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு சுருண்டது. ெ
ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்: சௌராஷ்டிர கேப்டன் ரவீந்திர ஜடேஜா அற்புதமாக பந்துவீசி 7 விக்கெட்டை சாய்த்தாா். தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய சௌராஷ்டிரம் ஜெய் கோஹில் விக்கெட்டை இழந்தது. 4/1 ரன்களை சோ்த்துள்ளது சௌராஷ்டிரா.
வெற்றிக்கு 262 ரன்கள் சௌராஷ்டிராவுக்கு தேவைப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

பிரமிக்கத்தக்கக் கூடிய கேட்ச்..! தன்னையே பாராட்டிக்கொண்ட ஸ்ரேயாஷ்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

