பாட் கம்மின்ஸ் என்னை பேட் செய்ய வேண்டாம் என்றார்: நாதன் லயன்

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார்.
பாட் கம்மின்ஸ் என்னை பேட் செய்ய வேண்டாம் என்றார்: நாதன் லயன்
Published on
Updated on
1 min read

ஆஷஸ் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் என்னை பேட் செய்ய வேண்டாம் என கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

காலின் பின் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணத்தினால் தன்னை பேட் செய்ய வேண்டாம் என பாட் கம்மின்ஸ் கேட்டுக் கொண்டதாகவும், இருப்பினும் அணிக்காக எனது பங்களிப்பை வழங்குவதற்காக பேட் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இறுதியில் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. 

ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2-ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லயனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காயம் காரணத்தினால் நாதன் லயனை இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் பாட் கம்மின்ஸ். இருப்பினும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய லயன் பேட் செய்தார். 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. அதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்றது.

இது குறித்து நாதன் லயன் கூறியதாவது: பாட் கம்மின்ஸ் என்னிடம் இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் பேட் செய்ய வேண்டாம் என்றார். ஆனால், நான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டோனால்டு மற்றும் மருத்துவக் குழுவிடம் பேசினேன். நான் பேட் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களிடம்  பேசினேன். நான் அதிகமாக மருத்துவக் குழுவினருடன் நேரம் செலவிட்டேன். பிறகு, இரண்டாவது இன்னிங்ஸில் அணிக்கு எனது பங்களிப்பை வழங்குவதற்காக பேட் செய்வதற்கு களமிறங்கினேன். நான் மருத்துவக் குழுவோடு செலவிட்ட நேரம் இரண்டாவது இன்னிங்ஸில் என்னை 13 பந்துகள் வரை தாக்குப் பிடிக்க உதவி செய்தது. நான் பேட் செய்வது குறித்து நிறைய பேச்சுகள் இருந்தன. ஆனால், அணிக்கு எனது பங்களிப்பை வழங்கி என் அணி வீரர்களுக்கு உதவிட பேட் செய்தேன்.  ஆட்டத்தின் கடைசி நாளும் இதனை செய்வேன். காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன். ஆஷஸ் தொடரை இங்கு வெல்ல வேண்டும் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதனை நான் பலமுறை கூறியிருக்கிறேன். ஆனால், இந்த காயம் எனக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com