ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை! 

பிரபல ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டாா்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

News image
Updated On :2 ஜூலை 2023, 10:51 am IST

லண்டனில் நடைபெறும் 2வது ஆஷஸ் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 416 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

4வது நாள் முடிவில் இங்கிலாந்து 114/4 ரன்கள் எடுத்தது. இதில் மிட்செல் ஸ்டாா்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த விக்கெட்டின் மூலம் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

ஆஸ்திரேலியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (315)எடுத்த இடது கை பந்து வீச்ச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மிட்செல் ஜான்சன் 313 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். 

மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் ஸ்டார்க் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஷேன் வார்னே 708 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். க்ளென் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடமும் லயன் 496 விக்கெட்டுகளுடன் மூன்றாமிடத்திலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.