எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

இந்த மூன்று அணிகளால் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும்: கிறிஸ் கெயில்

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:44 am IST

இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகள் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது இறுதியில் அந்த கிரிக்கெட்டையே அழித்துவிடும் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் போன்ற சிறிய அணிகள் சிறப்பாக விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெரிய அணிகளுக்கு கொடுப்பதுபோல் அதிக அளவில் ஊதியம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மூத்த வீரர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: இத்தனை ஆண்டுகளில் கிரிக்கெட் சிறிது மாறிவிட்டது. கிரிக்கெட் தற்போது மிகப் பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. டி20 போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளுக்கும் அதிக அளவிலான பணம் செலவிடப்படுகிறது. சிறிய அணிகளைக் காட்டிலும் பெரிய அணிகளுக்கு அதிக அளவிலான ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால், சிறிய அணிகள் பாதிக்கப்படுகின்றன. இந்தக் குறைகளை களைய சரியான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் அனைவரும் பயனடைவர். சிறிய அணிகள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள அதிக அளவிலான போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு உள்ள சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் சிறிய அணிகளுக்கும் கிடைக்க வேண்டும். பெரிய அணிகளில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போன்று மற்ற அணி வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சில பெரிய அணிகள் மட்டுமே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும். அதில் அர்த்தமே இல்லை. அது விளையாட்டை அழித்துவிடும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.