சச்சினுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றிய ஸ்மித்! 

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் முன்னாள் வீரர் சச்சினுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார். 
சச்சினுக்கு அடுத்த இடத்தை கைப்பற்றிய ஸ்மித்! 
Published on
Updated on
1 min read

99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் 9113 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 32 சதங்கள், 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 6வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர்.  

சமீபத்தில் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் 1000 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்தார்.  

இந்நிலையில் 2வது ஆஷஸ் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதன் மூலம் டெஸ்டில் 13 ஆட்ட நாயகன் விருதுனை பெற்று சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். சச்சின் 200 போட்டிகளில் விளையாடி 14 முறை ஆட்ட நாயகன் விருது பெற்றதை ஸ்மித் 99 போட்டிகளிலே 13 முறை எடுத்து அசத்தியுள்ளார். 

மேலும், இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் 34 போட்டிகளில் 8 முறை ஆட்ட நாயகன் விருது பெற்று ஸ்மித் அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்றது ஜாக் காலிஸ் (23) என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com