இளமையாக இருக்கிறேன்; இன்னும் அதிகமாக விளையாட வேண்டியுள்ளது: ரஹானே நெகிழ்ச்சி! 

டெஸ்ட் அணியில் மீண்டும் துணைக் கேப்டனாக பதவியேற்றிருக்கும் ரஹானே தான் இன்னும் அதிகமாக கிரிக்கெட் விளையாட வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் விளையாட மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. நாளை (ஜூலை 12ஆம் நாள்) முதல் டெஸ்ட் தொடங்க உள்ளது. 

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய ரஹானே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வான ரஹானே மட்டுமே சிறப்பாக விளையாடினார்.

தற்போது மே.இ.தீவுகள் அணி தொடரில் மீண்டும் டெஸ்ட் அணிக்கு துணைக் கேப்டனாக பதவி ஏற்றுள்ளார். இது குறித்து ரஹானே செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 

நாங்கள் நன்றாக பயிற்சி எடுத்துள்ளோம். நாங்கள் மே.இ.தீவுகள் அணியை மதிக்கிறோம். எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாதா அணிகளில்  அவர்களும் உள்ளனர். அவர்களது சொந்த மண்ணில் சிறப்பாகவே விளையாடியுள்ளனர். நூறு சதவிகிதம் எங்களது திறனை வெளிப்படுத்த உள்ளோம். 

நான் ஏற்கனவே துணைக் கேப்டனாக 4-5 வருடங்களாக இருந்துள்ளேன்.   மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி. நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். என்னில் இன்னும் அதிகமான கிரிக்கெட் பாக்கி இருக்கிறது. ஐபில், உள்ளூர் ஆட்டங்கள் சிறப்பாக அமைந்தது. தற்போது கிரிகெட்டை மகிழ்ச்சியுடன் ஆடுகிறேன். எதிர்காலம் குறித்து கவலையில்லை. அணிக்கு என்ன தேவையோ அதை செய்வதுதான் எனது நோக்கமாக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com