எனது மனைவிக்கு என்னைவிட இவரைத்தான் பிடிக்கும்: ஸ்டூவர்ட் பிராட் 

பிரபல இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் அவரது மனைவிக்கு பிடித்த வீரர்கள் பட்டியலில் தான் இரண்டாவது இடம் வகித்துள்ளதாக கூறியுள்ளார். 
எனது மனைவிக்கு என்னைவிட இவரைத்தான் பிடிக்கும்: ஸ்டூவர்ட் பிராட் 
Published on
Updated on
1 min read

இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸி. அணி விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு நடைபெறும் ப்ரத்யேகமான டெஸ்ட் போட்டி ஆஷஸ் என அழைக்கப்படுகிறது. 2-1 என ஆஸி. முன்னிலை வகிக்கிறது. 

3வது போட்டியில் இங்கிலாந்து அணி மீண்டெழுந்துள்ளது. அணியில் 3 மாற்றங்களை செய்ததன் மூலம் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதில் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசி மற்றும் பேட்டிங்கிலும் அசத்தினார். 

இந்நிலையில்  ஸ்டூவர்ட் பிராட், “கிறிஸ் வோக்ஸ் அற்புதமான கிரிக்கெட்டர். எனது மனைவி மோலிக்கு அவர்தான் பிடித்தமான வீரரென கூறியுள்ளார். அதற்கு ‘நான் இல்லையா?’ எனக் கேட்டேன். அதற்கு எனது மனைவி, ‘நீங்கள் இரண்டாவதுதான்’ எனக் கூறினார். நான் ‘மிக்க நன்றி’ எனக் கூறினேன். இரண்டு உலகக் கோப்பை இறுதி போட்டிகளை வெல்ல உதவியவரே கிறிஸ் வோக்ஸ்தான். ஆனால் அதைவிடவும் 3வது ஆஷஸ் போட்டியில் அவரது சிறப்பான ஆல்ரவுண்ட் ஃபர்பாமென்ஸ் முக்கியனமான ஒன்றாகும்” எனக் கூறியுள்ளார். 

தீவிர பயிற்சியில் கிறிஸ் வோக்ஸ் 
தீவிர பயிற்சியில் கிறிஸ் வோக்ஸ் 

ஸ்டூவர்ட் பிராட் டெஸ்டில் 598 விக்கெட்டுகளும் கிறிஸ் வோக்ஸ் 136 விக்கெட்டுகளும் எடுத்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com