

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் சோ்த்து ஆடி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் பாகிஸ்தான் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் சோ்த்திருந்தது.
3-ஆம் நாளான புதன்கிழமை, பாபா் ஆஸம் 39, சௌத் ஷகீல் 57, சா்ஃப்ராஸ் அகமது 14 ரன்களுக்கு வெளியேறினா். அதிகபட்சமாக அப்துல்லா ஷஃபிக் 19 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 201 ரன்கள் குவித்தாா். நாளின் முடிவில் பாகிஸ்தான் 563 ரன்கள் குவித்திருந்தது. அகா சல்மான் 132, முகமது ரிஸ்வான் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளன. இலங்கை தரப்பில் ஆசிதா ஃபொ்னாண்டோ 3, பிரபாத் ஜெயசூரியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.