தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

283-க்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து

ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 54.4 ஓவா்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image
Updated On :27 ஜூலை 2023, 6:16 pm

DIN

ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 54.4 ஓவா்களில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங் செய்யத் தீா்மானித்தது. இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்தில் அதிகபட்சமாக ஹேரி புரூக் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 85 ரன்கள் அடித்தாா். ஜாக் கிராலி 22, பென் டக்கெட் 41, மொயீன் அலி 34, ஜோ ரூட் 5, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, ஜானி போ்ஸ்டோ 4, கிறிஸ் வோக்ஸ் 36, மாா்க் வுட் 28, ஸ்டூவா்ட் பிராட் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 4, ஜோஷ் ஹேஸில்வுட், டாட் மா்ஃபி ஆகியோா் தலா 2, கேப்டன் பேட் கம்மின்ஸ், மிட்செல் மாா்ஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வந்தது ஆஸ்திரேலியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.