சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த அஸ்வின்! 

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 
அஸ்வின் (கோப்புப் படம்)
அஸ்வின் (கோப்புப் படம்)

ஜூன் 5, 2010இல் தனது முதல் சர்வதேச போட்டியினை இலங்கைக்கு எதிராக விளையாடினார் ரவிசந்திரன் அஸ்வின். முதல் போட்டியில் பேடிங்கில் 38 ரன்கள், பௌலிங்கில் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தோனி தலைமையில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். 

டெஸ்டில் ஐசிசி சிறந்த பௌலர் தரவரிசிசையில் முதலிடத்தில் இருக்கிறார் அஸ்வின். அதுமட்டுமின்றி சிறந்த ஆல்ரவுண்டர் வரிசையில் 2வது இடத்தில் இருக்கிறார். 

36 வயதாகும் அஸ்வின் டெஸ்டில் மட்டுமே தொடர்சியாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வரும் அஸ்வின் ஒருநாள், டி20 போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட வேண்டுமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

92 டெஸ்டில் விளையாடுயுள்ள அஸ்வின் 474 விக்கெட்டுகளையும் 3129 ரன்களையும் எடுத்துள்ளார். ஜூஜ்ன் 7இல் தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அஸ்வினின் பங்கு அதிகமிருக்குமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகள் நிறைவையொட்டி ரசிகர்கள் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com