ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.
ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த அஸ்வின்!
இந்நிலையில், முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருவரையும் தேர்வு செய்யலாமென கூறியுள்ளனர்.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா, அஸ்வின் முன்னிலை.
இதையும் படிக்க: டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!
கவாஸ்கர் கூறியது: ரோஹித், கில் தொடக்க வீரர்களாகவும், 3வது புஜாரா, 4வது கோலி, 5வது ரஹானே. 6வது பரத் அல்லது இஷான் கிஷான். 7,8 நிச்சயமாக அஸ்வின், ஜடேஜா இருக்க வேண்டும். 9,10,11 முறையே ஷர்துல், ஷமி, சிராஜ் இருந்தால் நன்றாக இருக்கும்.
ரிக்கி பாண்டிங் கூறியது: என்னைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா இருவரையும் எடுக்க வேண்டும். இந்தியா அப்படித்தான் தேர்வு செய்யுமென நினைக்கிறேன். ஜடேஜாவை பேட்டிங்காக மட்டுமேகூட எடுக்கலாம். தேவைப்பட்டால் பௌலிங் உபயோகித்துக் கொள்ளலாம். அஸ்வின் சிறந்த பௌலராக உள்ளார். அவரை நிச்சயமாக தேர்வு செய்ய வேண்டும். ஷர்துல் எடுத்தால் இன்னும் பேட்டிங் வலுவாக இருக்கும்.
உத்தேச அணி: ரோஹித், கில், புஜாரா, கோலி, ரஹானே, பரத், ஜடேஜா, அஸ்வின், தாகுர், ஷமி, சிராஜ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


