சில நேரங்களில் எளிமையான விஷயம்கூட கடினமாக இருக்கும்: ரிஷப் பந்த்தின் தன்னம்பிக்கை பதிவு! 

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் இன்ஸ்டாகிராமில் புதிய விடியோ பதிவிட்டுள்ளார். 
சில நேரங்களில் எளிமையான விஷயம்கூட கடினமாக இருக்கும்: ரிஷப் பந்த்தின் தன்னம்பிக்கை பதிவு! 

இந்திய அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர்களில் ரிஷப்பும் ஒருவர். அவர் ஐபிஎல் போட்டிகளில் தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக 2021 மற்றும் 2022 ஆம் ஆகிய ஆண்டுகளில் அணியை வழிநடத்தியுள்ளார்.

தனது தாயை பார்க்க கிளம்பியபோது விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது.விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா்.  

தற்போது வீட்டில் இருக்கும் ரிஷப்பிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று வருகிறது. கார் விபத்தில் சிக்கிய காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. சமீபத்தில் அவருக்கு இரண்டாவது அறுவை சிகிச்ச தேவையில்லையென பிசிசிஐ அதிகாரிகள் கூறிருந்தார்கள்.  

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விடியோவில் படிக்கட்டில் முதலில் கஷ்டப்பட்டு நடந்துவரும் ரிஷப் பந்த் பின்னர் சாதரணமாக நடந்து வருவார். இதை பதிவிட்டு, “சில நேரங்களில் எளிமையான விஷயம்கூட கடினமாக இருக்கும். அவ்வளவு ஒன்னும் மோசமில்லை“ என ரிஷப் தனக்குத்தானே தன்னம்பிக்கை கொடுத்துள்ளார். 

கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும்,  “சூப்பர். விரைவில் விளையாட தயாராகுங்கள்”  என கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com