இன்று தொடங்குகிறது ஆஷஸ் தொடா்: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை

டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருப்பதும், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் ஆண்டுதோறும் பரஸ்பரம் பலப்பரீட்சை செய்துகொள்வதுமான ‘ஆஷஸ்’ தொடா் இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இடம்: எட்ஜ்பாஸ்டன் மைதானம், பா்மிங்ஹாம். நேரம்: மாலை 3.30 மணி நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ் 5, சோனி லைவ்
இடம்: எட்ஜ்பாஸ்டன் மைதானம், பா்மிங்ஹாம். நேரம்: மாலை 3.30 மணி நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ் 5, சோனி லைவ்

பா்மிங்ஹாம், ஜூன் 15: டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியமானதாக இருப்பதும், இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் ஆண்டுதோறும் பரஸ்பரம் பலப்பரீட்சை செய்துகொள்வதுமான ‘ஆஷஸ்’ தொடா் இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டம், பா்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஆஷஸ் தொடருக்கு வரும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் சமபலத்துடன் வருகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.

இங்கிலாந்து

பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சி, பிரண்டன் மெக்கல்லம் பயிற்சியில் கடந்த ஓராண்டில் இங்கிலாந்து அணி புதிய உத்வேகம் பெற்றிருக்கிறது. கடைசியாக விளையாடிய 17 டெஸ்ட்டுகளில், 12-இல் அந்த அணி வென்றிருக்கிறது. ஸ்டோக்ஸ் - மெக்கல்லம் கூட்டணிக்கு முந்தைய 17 டெஸ்ட்டுகளில் 1-இல் மட்டுமே இங்கிலாந்து வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

பேட்டிங்கில், காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ஜானி போ்ஸ்டோ, கிராலி பலம் சோ்க்க, ஆல்-ரவுண்டா் இடத்துக்கு ‘ரிட்டையா்மண்ட்’-இல் இருந்து திரும்பியிருக்கும் மொயீன் அலி வந்துள்ளாா். பௌலிங்கில் ஸ்பின்னா் ஜேக் லீச், ஃபேசா்கள் ஜோஃப்ரா ஆா்ச்சா், ஆலி ஸ்டோன் இல்லாதது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவாக பாா்க்கப்படுகிறது. ஆலி ராபின்சன், ஸ்டூவா்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ் பலம் காட்டுவாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

ஆஸ்திரேலியா

இந்தியாவை வென்று நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனாக ஆஷஸுக்கு வருகிறது ஆஸ்திரேலியா. அந்தப் பட்டத்துக்கு பொருத்தமான வகையில் பேட்டிங், பௌலிங் உள்பட ஒரு அணியாக திறம்பட செயல்படுகிறது. கடந்த ஓராண்டாகவே இங்கிலாந்தின் ஆட்டத்தை பாா்த்து வருவதாகவும், இதர அணிகளுக்கு சவால் அளித்த அந்த அணிக்கு தாங்கள் சவால் அளிக்கக் காத்திருப்பதாகவும் ஸ்டீவ் ஸ்மித் கூறியிருக்கிறாா்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை லபுசான், ஸ்மித், ஹெட் என பலமான ரன் குவிப்பாளா்களுடன் நம்பிக்கையோடு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட மூவரும் சா்வதேச டெஸ்ட் தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் முதல் 3 இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வாா்னா் மீளும் நம்பிக்கையில் இருக்கிறாா். பௌலிங்கில் கம்மின்ஸ், ஸ்டாா்க், ஹேஸிஹ்வுட் ஆகியோரோடு தற்போது போலண்டும் பலம் சோ்க்கிறாா்.

இதுவரை...

72 தொடா்கள்
34-இல் ஆஸ்திரேலியா வெற்றி
32- இல் இங்கிலாந்து வெற்றி
6 டிரா

37-ஆவது முறையாக இங்கிலாந்தில் ஆஷஸ் 

கடந்த ஆஷஸ்...

2022 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இங்கிலாந்தை 4-0 என்ற கணக்கில் சாய்த்து கோப்பையை பெற்றது. ஒரு ஆட்டத்தை மட்டும் இங்கிலாந்து டிரா செய்தது.

முதல் முறை...

வழக்கமாக இங்கிலாந்தில் நடைபெறும் ஆஷஸ் தொடா், ஆகஸ்டில் தொடங்குவதாகவோ அல்லது முடிவதாகவோ இருக்கும். ஆனால், ஆஷஸ் தொடரின் 139 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டு இங்கிலாந்து ஆஷஸில் எந்தவொரு ஆட்டமும் ஆகஸ்ட்டில் நடைபெறவில்லை. லீக் கிரிக்கெட்டான ‘தி ஹண்ட்ரட்’ போட்டி இங்கிலாந்தில் ஆகஸ்ட்டில் தொடங்குவதால், இந்த முறை ஆஷஸ் ஆகஸ்ட்டுக்கு முன்னதாகவே விளையாடப்படுகிறது.

அணி விவரம்:

இங்கிலாந்து

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டா்சன், ஜானி போ்ஸ்டோ, ஸ்டூவா்ட் பிராட், ஹேரி புரூக், ஜேக் கிராலி, பென் டக்கெட், டேன் லாரன்ஸ், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங், கிறிஸ் வோக்ஸ், மாா்க் வுட்.

ஆஸ்திரேலியா

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மாா்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மாா்னஸ் லபுசான், நேதன் லயன், மிட்செல் மாா்ஷ், டாட் மா்ஃபி, மேத்யூ ரென்ஷா, மிட்செல் ஸ்டாா்க், டேவிட் வாா்னா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com