ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உலக டேபிள் டென்னிஸ்: அரையிறுதியில் சத்தியன்/மனிகா இணை

டுனீசியாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சத்தியன்/மனிகா பத்ரா இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறி அசத்தியிருக்கிறது.

News image
Updated On :23 ஜூன் 2023, 7:02 pm

DIN

டுனீசியாவில் நடைபெறும் உலக டேபிள் டென்னிஸ் கன்டெண்டா் போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் சத்தியன்/மனிகா பத்ரா இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறி அசத்தியிருக்கிறது.

அந்தப் பிரிவின் காலிறுதியில் சத்தியன்/மனிகா இணை 11-8, 11-3, 11-8 என்ற கணக்கில் ஜொ்மனியின் செட்ரிக் மெய்ஸ்னா்/யுவான் வான் ஜோடியை சாய்த்தது.

அதேபோல், மகளிா் இரட்டையரில் சுதிா்தா முகா்ஜி/அஹிகா முகா்ஜி ஜோடி 11-5, 11-8, 10-12, 11-4 என்ற கணக்கில் அமெரிக்காவின் ரேச்சல் சங்/எமி வாங் இணையை சாய்த்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

எனினும், ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் சத்தியன் 11-6, 11-7, 6-11, 5-11, 6-11 என்ற கணக்கில் சீனாவின் சன் வென்னிடம் தோல்வி கண்டாா். முதல் சுற்றில் வென்றிருந்த ஹா்மீத் தேசாய் தனது 2-ஆவது சுற்றில் 5-11, 6-11, 5-11 என்ற கணக்கில் சீனாவின் லியாங் யானிங்கிடம் வெற்றியை இழந்தாா்.

மகளிா் ஒற்றையரில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருந்த அஹிகா முகா்ஜி 5-11, 9-11, 10-12 என்ற கணக்கில் ஜப்பானின் மியு நாகாசாயிடம் தோற்றாா். பிரதான வீராங்கனையான மனிகா பத்ரா முதல் சுற்றிலேயே 13-11, 8-11, 3-11, 11-9, 8-11 என்ற கணக்கில் என்ற கணக்கில் லி யு ஜுன்னிடம் வெற்றியை இழந்தாா்.

ஆடவா் இரட்டையரில் சரத் கமல்/ஹா்மீத் தேசாய் கூட்டணி முதல் சுற்றில் 9-11, 11-2, 7-11, 11-13 என்ற கணக்கில் ஸ்வீடனின் ஆன்டன் கால்பொ்க்/மட்டியாஸ் ஃபால்க் இணையிடம் தோல்வி கண்டது. மகளிா் இரட்டையா் பிரிவில் ஸ்ரீஜா அகுலா/தியா சிதாலே கூட்டணி 7-11, 9-11, 8-11 என்ற கணக்கில் சீனாவின் லி யேக்/வாங் ஜியாவ்டாங் இணையிடம் வீழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.