500 விக்கெட்டுகள்; 5,000 ரன்கள்- ஜடேஜா சாதனை
இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, சா்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் சாய்த்து, 5,000 ரன்களையும் எட்டி புதன்கிழமை சாதனை படைத்தாா்.


இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா, சா்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் சாய்த்து, 5,000 ரன்களையும் எட்டி புதன்கிழமை சாதனை படைத்தாா். அத்தகைய சாதனை புரிந்த 2-ஆவது இந்திய வீரா் என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா். முதல் வீரா் கபில் தேவ் ஆவாா்.
இந்தூா் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டான டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல் கல்லை எட்டினாா் ஜடேஜா. இத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 260, ஒரு நாள் கிரிக்கெட்டில் 189, டி20 கிரிக்கெட்டில் 51 விக்கெட்டுகளை அவா் வீழ்த்தியிருக்கிறாா்.
அதேபோல் டெஸ்ட்டில் 2,619, ஒரு நாளில் 2,447, டி20-இல் 457 ரன்கள் விளாசியிருக்கிறாா். இந்த 500 விக்கெட்டுகள் - 5,000 ரன்கள் பட்டியலில், கபில் தேவ், ஜடேஜா தவிா்த்து தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ், ஷான் பொல்லாக், பாகிஸ்தானின் இம்ரான் கான், வாசிம் அக்ரம், ஷாஹித் அஃப்ரிதி, இங்கிலாந்தின் இயான் போதம், இலங்கையின் சமிந்தா வாஸ், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் உள்ளிட்டோா் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...