அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மதிய உணவு இடைவேளை: ஆஸி. அணியின் வேகத்தைத் தடுத்த அஸ்வின், ஷமி!

ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 27, ஸ்மித் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

News image
Updated On :9 மார்ச் 2023, 6:12 am

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது.

1 லட்சம் போ் அமரும் வசதியுடன், தனது பெயா் சூட்டப்பட்டு உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இருக்கும் ஆமதாபாத் மைதானத்துக்குப் பிரதமா் நரேந்திர மோடி இன்று வருகை தந்தார். அவருடன் ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியும் மைதானத்துக்கு வந்து முதல் நாள் ஆட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டார்.  ஆட்டம் தொடங்கும் முன்பு இரு நாட்டுப் பிரதமர்களும் டெஸ்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள். 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸி. அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்திய அணியில் சிராஜுக்குப் பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸி. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்டும் உஸ்மான் கவாஜாவும் நன்கு விளையாடினார்கள். இதனால் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. விரைவாக ரன்கள் குவித்து 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த ஹெட், அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு லபுஷேனை 3 ரன்களுக்கு போல்ட் செய்தார் ஷமி. 

ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. கவாஜா 27, ஸ்மித் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.