சென்னை ஒருநாள் ஆட்டம்: டிக்கெட்டுகள் விற்பனை குறித்து அறிவிப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது.


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் ஆட்டம் சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
சென்னை ஒருநாள் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 அன்று பேடிஎம் மற்றும் இன்சைடர் இணையத்தளம் வழியாக விற்கப்படவுள்ளது.
மேலும் மைதானத்தில் மார்ச் 18 அன்று டிக்கெட்டுகள் விற்கப்படவுள்ளன. காலை 11 மணி முதல் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம்.
டிக்கெட்டுகளின் குறைந்த விலை - ரூ. 1200, அதிக விலை - ரூ. 10,000. ரூ. 1200 டிக்கெட்டை மார்ச் 18 அன்று நேரில் சென்றுதான் வாங்க முடியும். இணையம் வழியாக ரூ. 1500, ரூ. 3000, ரூ. 5000, ரூ. 6000, ரூ. 8000, ரூ. 10000 மதிப்புகளை டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
தவிரவும் ஒருநாள் ஆட்டத்தைக் காணப்போகும் ரசிகர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. வெளியிலிருந்து உணவு எதுவும் கொண்டுவரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆட்டம் நடைபெறும் மார்ச் 22 அன்று காலை 11.30 மணி முதல் ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...