2013 முதல் சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத இந்திய அணி!
இந்திய அணியை சொந்த மண்ணில் எந்த அணி வீழ்த்தப் போகிறது?


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. ஆமதாபாத் டெஸ்டில் சதமடித்த விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருக்கும் தொடர் நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
2012-ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 எனத் தோற்றது இந்திய அணி. அதன்பிறகு 2013 முதல் இன்று வரை இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய 16 டெஸ்ட் தொடர்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அணி, 3 டெஸ்டுகளில் மட்டுமே தோற்றுள்ளது.
2013 முதல் இந்திய அணியை எந்த அணியாலும் சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை. ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் சில நெருக்கடிகளை அளித்தாலும் தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி. தோனி, கோலி, ரோஹித் சர்மா ஆகிய கேப்டன்கள் சொந்த மண்ணில் இந்திய அணியின் பெருமைக்கு எவ்வித இழுக்கும் நேராமல் பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
இந்திய அணியை சொந்த மண்ணில் எந்த அணி வீழ்த்தப் போகிறது?
2013 முதல் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடர்கள்
1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 வெற்றி
2. மே.இ. தீவுகளுக்கு எதிராக 2-0 வெற்றி
3. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3-0 வெற்றி
4. நியூசிலாந்துக்கு எதிராக 3-0 வெற்றி
5. இங்கிலாந்துக்கு எதிராக 4-0 வெற்றி
6. வங்கதேசத்துக்கு எதிராக 1-0 வெற்றி
7. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 வெற்றி
8. இலங்கைக்கு எதிராக 1-0 வெற்றி
9. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 1-0 வெற்றி
10. மே.இ. தீவுகளுக்கு எதிராக 2-0 வெற்றி
11. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3-0 வெற்றி
12. வங்கதேசத்துக்கு எதிராக 2-0 வெற்றி
13. இங்கிலாந்துக்கு எதிராக 3-1 வெற்றி
14. நியூசிலாந்துக்கு எதிராக 1-0 வெற்றி
15. இலங்கைக்கு எதிராக 2-0 வெற்றி
16. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 வெற்றி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...