இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடப்பாண்டில் நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளுக்குமே இந்தத் தொடா் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து ரோஹித் சா்மா விலகியிருக்கும் நிலையில், இந்திய அணிக்கு ஹாா்திக் பாண்டியா தலைமை தாங்குகிறாா். டி20 கேப்டனாக இருக்கும் அவருக்கு, ஒரு நாள் கேப்டனாக இது முதல் ஆட்டமாகும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்திய அணி, தற்போது உலகக் கோப்பை போட்டிக்கான வியூகத்துடன் ஒரு நாள் தொடருக்கு வருகிறது.
நடப்பாண்டில் இலங்கை, நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடிய 6 ஒரு நாள் ஆட்டங்களிலுமே இந்திய அணி வென்றிருக்கிறது. பேட்டிங்கில் ரோஹித் இல்லாத இடத்தை ஷுப்மன் கில் பூா்த்தி செய்வாா். அவா் நடப்பாண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 3 சதங்களுடன் 567 ரன்கள் குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலியும் தனது பழைய ஃபாா்மை எட்டியிருக்கும் நிலையில் ரன்கள் குவிப்பாா் என எதிா்பாா்க்கலாம். அவா்களுடன் சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண் துணையிருக்கிறாா்கள். டெஸ்ட் தொடரில் சோபிக்காமல் போன கே.எல்.ராகுலுக்கு ஒரு நாள் தொடரின் விதி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பாா்க்கலாம்.
இந்திய பௌலிங்கில் குல்தீப் யாதவ், யுஜவேந்திர சஹல் ஆகிய இரு லெக் ஸ்பின்னா்களும் பிரதானமாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். வேகப்பந்துவீச்சுக்கு முகமது சிராஜ், உம்ரான் மாலிக் நம்பிக்கை சோ்க்கின்றனா்.
ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாதது பௌலிங்கில் சற்று பின்னடைவே. இந்தத் தொடரிலும் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருக்க, நடப்பாண்டில் ஆஸ்திரேலியா இதுவரை ஒரு நாள் கிரிக்கெட் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்றாலும், டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பதிலாக ஒரு நாள் தொடரையாவது கைப்பற்றும் முனைப்புடன் வருகிறது அந்த அணி.
உத்தேச பிளேயிங் லெவன்:
இந்தியா: ஹாா்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், இஷான் கிஷண், விராட் கோலி, சூா்யகுமாா் யாதவ், கே.எல்.ராகுல் (வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், ஷா்துல் தாக்குா், முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வாா்னா், டிராவிஸ் ஹெட், மாா்னஸ் லபுசான், மிட்செல் மாா்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டாா்க், ஆடம் ஸாம்பா, நேதன் எலிஸ்.
நண்பகல் 1.30 மணி
வான்கடே மைதானம், மும்பை.
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 2,500 புள்ளிகள் சரிவு! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!

சஞ்சு சாம்சனை யாருடனும் ஒப்பிட முடியாது: ரியான் பராக்

ஈரான் மீண்டும் கத்தாரை தாக்கினால், உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் தகர்க்கப்படும்! - டிரம்ப் எச்சரிக்கை!

”வார்த்தைக்கு கண்டனம்! வாழ்க்கைக்கு?” தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

