டெஸ்டில் முதலிடம் பிடித்த இந்திய அணி! 

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

வருடாந்திர தரவரிசை பட்டியலில் இந்திய அணி டெஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. 15 மாதங்களாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 

ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வருடாந்திர தரவரிசை மதிப்பீட்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 122 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. இந்தியா 119 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தது. ஆண்டு தர நிர்ணய மதிப்பீடுகளின்படி மே 2020 முதல் மே 2022 வரை நடைபெற்ற போட்டிகளுக்கு 50 சதவிகித புள்ளிகளும், அதற்கு பிறகான போட்டிகளுக்கு 100 சதவிகித புள்ளிகளும் வழங்கப்படும். இதனால் ஆஸி. 2019-2020இல் பாகிஸ்தான் (2-0), நியூசிலாந்து (3-0) உடனான வெற்றி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2021-2022 இங்கிலாந்துடன் வென்ற (4-0) தொடருக்கும் பாதி புள்ளிகளே கிடைத்தது. இதனால் ஆஸி. அணியின் புள்ளிகள் 121லிருந்து 116 ஆக குறைந்தது. 

இதே முறைப்படி இந்தியா 2019இல் நியூசிலாந்து அணியிடம் (2-0) என தோல்வியுற்றது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால் 2 புள்ளிகள் அதிகமாகி இந்திய அணி 121 புள்ளிகளுடன் முதலிடத்தில் வந்துள்ளது. 

இதனால் வரவிருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com