
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானது. நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
குஜராத் அணியின் தொடக்க வீரர் சாஹா அதிரடியாக விளையாடி 20 பந்தில் அரை சதமடித்துள்ளார். தற்போது சாஹா 54, கில் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
குஜராத் அணி 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.