நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் குஜராஜ் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்று இரவு மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடர் முழுவதும் தோனி செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் குவிந்து ஆரவாரம் செய்தனர்.
இந்நிலையில், தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் காணொலியை குஜராத் டைட்டன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பெரும்பாலானோர் தோனி மிகவும் சீரியஸான நபர் என்று நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், நான் அவருடன் ஜாலியாக காமெடி சொல்லி விளையாடுவேன். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.
அவருடன் நிறைய உரையாடியதைவிட, அவரை பார்த்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர். சகோதரரை போன்றவர். நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டின் சுவர்கள் பளபளக்க..
பெரம்பூர் டூ விருகம்பாக்கம்! ஒரே நாளில் 5 தொகுதிகள்! மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!
பாஜக வேட்பாளர்கள் யார்? ஆலோசனையில் அண்ணாமலை பங்கேற்கவில்லை!
கமேனிக்குப் பின்... புதிய உச்சத்தலைவராக தலைமையேற்க ஈரான் அழைத்தது! - டிரம்ப்
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

