இவர்களுக்கு எதிராக பேட் செய்வது எங்களின் திறனை சோதிக்கும்: தென்னாப்பிரிக்க கேப்டன்

இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும்  ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும்.
இவர்களுக்கு எதிராக பேட் செய்வது எங்களின் திறனை சோதிக்கும்: தென்னாப்பிரிக்க கேப்டன்

இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7  போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 6 போட்டிகளில் வெற்றி பெற்று  12  புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் தென்னாப்பிரிக்க அணியும், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியே இல்லாமல் பயணிக்கும் இந்திய அணியும் அடுத்த போட்டியில் தங்களுக்குள் மோதவுள்ளனர். இரு அணிகளும் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் தரமான சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும்  ரவீந்திர ஜடேஜாவுக்கு எதிராக விளையாடுவது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களை சோதிக்கும் விதமாக அமையும் என அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். குல்தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டத்தில் மத்திய வரிசையில்  சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர். அதனால், ஆட்டத்தின் நடுவரிசை ஓவர்களில் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதனால் குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜாவுக்கு எதிராக பேட் செய்வது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களின் திறனை சோதிக்கும் விதமாக அமையும் என்றார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (நவம்பர் 5) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com