சச்சினின் இந்த சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்: ரவி சாஸ்திரி

சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
சச்சினின் இந்த சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார்: ரவி சாஸ்திரி

சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தரப்பில் விராட் கோலி அதிகபட்சமாக  117 ரன்கள் குவித்தார். நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறிடித்தார். விராட் கோலியின் நேற்றைய சதம்  ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 50-வது சதமாகும்.

இந்த நிலையில், சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய வீரர் விராட் கோலியால் முறியடிக்க முடியும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சச்சின்  டெண்டுல்கர் சர்வதேசப் போட்டிகளில்  100 சதங்கள் அடிப்பார் என்றும், மற்றொரு வீரர் அந்த சாதனைக்கு மிக அருகில் வருவார் என்றும் யார் நினைத்திருப்பார்கள். சர்வதேசப் போட்டிகளில் விராட் கோலி 80  சதங்கள் அடித்துள்ளார். அதில் 50 சதங்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்தது. அதுவே அவரது அதிகபட்ச சதங்கள் எண்ணிக்கையாகவும் மாறிவிட்டது. நம்பமுடியாத விதமாக இருக்கிறது. முடியாதது என்பது எதுவும் இல்லை என்பதுபோல் தற்போது வீரர்களின் ஆட்டம் உள்ளது.

விராட் கோலியின் அடுத்த 10 போட்டிகளில் நீங்கள் மேலும் 5 சதங்களை எதிர்பார்க்கலாம். அனைத்து வடிவிலானப் போட்டிகளிலும் விராட் கோலி இடம்பெற்றுள்ளார். அவர் இன்னும் 3-4 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என நினைக்கிறேன். அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு விராட் கோலி சதம் விளாசினார். அவர் இந்த உலகக்  கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com