தென்னாப்பிரிக்க அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை ஒருநாள் வெல்லும் என அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் கொல்கத்தாவில் நேற்று (நவம்பர் 16) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அரையிறுதிப் போட்டிகளில் தோற்கும் தென்னாப்பிரிக்காவின் வழக்கமும் இந்தத் தோல்வியின் மூலம் தொடர்கிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை ஒருநாள் வெல்லும் என அந்த அணியின் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நேர்மையாக கூறவேண்டுமென்றால், இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. நான் ரன் குவிப்பதைக் காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையை வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதை விரும்புவதாக குயிண்டன் டி காக் தெரிவித்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது. இந்த உலகக் கோப்பைத் தொடர் தொடங்கும் முன்பு, நிறைய நினைவுகளையும், உலகக் கோப்பை பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும் எனவும் நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், வெற்றி பெற தென்னாப்பிரிக்க வீரர்கள் கடின உழைப்பைக் கொடுத்ததை மறக்க முடியாது. இந்த நாள் எங்களுக்கான நாள் இல்லை. ஆனால், தென்னாப்பிரிக்கா ஒரு நாள் உலகக் கோப்பையைக் கண்டிப்பாக வெல்லும். இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளோம் என்றார்.
இதையும் படிக்க: தனது வெற்றிக்கான காரணம் குறித்து மனம் திறந்த முகமது ஷமி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய அரையிறுதிப் போட்டியில் டேவிட் மில்லர் 116 பந்துகளில் 101 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு ரூ. 18.5 கோடி கட்டணம்!
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சித் தலைமை அறிவுறுத்தல்!!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! வீடு, வாகனக் கடன் வட்டி குறையுமா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


