ஷுப்மன் கில்லுக்கு எதிராக மிட்செல் ஸ்டார்க் ஆதிக்கம்!

இந்திய அணியின் ஷுப்மன் கில்லுக்கு எதிரான மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு ஆதிக்கம் தொடர்கிறது.
ஷுப்மன் கில்லுக்கு எதிராக மிட்செல் ஸ்டார்க் ஆதிக்கம்!

இந்திய அணியின் ஷுப்மன் கில்லுக்கு எதிரான மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு ஆதிக்கம் தொடர்கிறது.

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 100 ரன்களுக்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவர் மிட்செல்  ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஒருநாள் போட்டிகளில் 4 ஆட்டங்களில் மூன்றாவது முறையாக ஷுப்மன் கில், மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். அதேபோல மிட்செல் ஸ்டார்க் பந்துவீசுகையில் ஷுப்மன் கில்  15-வது ஓவர்களைக் கடந்து விளையாடியது கிடையாது. 

மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில்  45 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஷுப்மன் கில் 38 ரன்கள் குவித்து 3 முறை விக்கெட்டை பறிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com