யு-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!

ஆசியக் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஆடவர் அணியை பிசிசிஐ இன்று (நவம்பர் 25) அறிவித்தது.
யு-19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்த பிசிசிஐ!

ஆசியக் கோப்பைக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஆடவர் அணியை பிசிசிஐ இன்று (நவம்பர் 25) அறிவித்தது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19  வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி  டிசம்பர் 17 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பிசிசிஐ கூறியிருப்பதாவது: ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடவுள்ள 19  வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை ஜூனியர் கிரிக்கெட் குழு தேர்ந்தெடுத்துள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி ஆசியக் கோப்பைப் போட்டியில் மிகவும் வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. ஆசியக் கோப்பையை இந்திய அணி 8 முறை வென்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கோப்பைக்கான யு-19 இந்திய அணி: அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ர மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான் , உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லே அவனீஷ் ராவ், சௌமி குமார் பாண்டே (துணைக் கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஸ் மஹாஜன், தனுஷ் கௌதா, ஆரதயா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com