ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை!

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2023, 2:55 pm

DIN

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி ஆப்கானிஸ்தான் அணி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளை வீழ்த்தி அசத்தியது ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானின் வெற்றியில் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கானின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. உலகக் கோப்பைத் தொடரைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக இருந்தது. 

இந்த நிலையில், ரஷித் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷித் கானுக்கு முதுகுப் பகுதியில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு சிறிது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து கிரிக்கெட் விளையாடத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.