துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹார்திக் பாண்டியாவை தக்கவைத்த குஜராத் டைட்டன்ஸ்!

ஹார்திக் பாண்டியாவை தக்கவைத்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணையவுள்ளார் எனப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம்.

News image
Updated On :26 நவம்பர் 2023, 1:47 pm

DIN

ஹார்திக் பாண்டியாவை தக்கவைத்து அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் இணையவுள்ளார் எனப் பரவிய செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம்.

ஹார்திக் பாண்டியாவை  தக்கவைத்தது மட்டுமில்லால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரே குஜராத் டைட்டன்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்துவார் எனவும் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக உருவான குஜராத் அணியின் கேப்டனாக அந்த அணியுடன் இணைந்தார் ஹார்திக் பாண்டியா. அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸுக்கு கோப்பையை வென்றுத் தந்தார் ஹார்திக். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் குஜராத் டைட்டன்ஸ் தோல்வியடைந்திருக்கும்.

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் விரைவில் தொடங்கவுள்ளதால் ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தக்கவைத்தும், விடுவித்தும் வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.