பெங்களூரு அணியிலிருந்து சன் ரைசர்ஸ் அணிக்கு விற்கப்பட்ட பிரபல ஆல்ரவுண்டர்!

ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேடிங் முறை மூலம் விற்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு அணியிலிருந்து சன் ரைசர்ஸ் அணிக்கு விற்கப்பட்ட பிரபல ஆல்ரவுண்டர்!

ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிரேடிங் முறை மூலம் விற்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷாபாஸ் அஹமது  டிரேடிங் முறையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விற்கப்பட்டுள்ளார். அவர் 2.4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளார். அதேபோல சன்ரைசர் ஹைதராபாத் அணியின் மயங்க் டாகர் அடுத்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார். 

இது தொடர்பாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சார்பில் தெரிவித்திருப்பதாவது: சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷாபாஸ் அஹமது சன்ரைசர்ஸ் அணியுடன் இணைகிறார். மயங்க் டாகர் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு செல்கிறார். அவரது எதிர்கால பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 39 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாபாஸ் அஹமது 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக அவர் விளையாடி வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com