ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் ஆடவர் அணி களமிறங்கியுள்ளது.
தகுதி சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய நேபாள அணியுடன், நேரடியாக காலிறுதியில் களமிறங்கும் இந்திய அணி இன்று மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை இந்திய அணி குவித்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 100(49 பந்துகள்), ரிங்கு சிங் 37(15), ஷிவம் துபே 25, ருதுராஜ் 25 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய நேபாள அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக திபேந்திர சிங் 32, சுந்தீப் ஜோரா 29, குஷல் மல்லா 29 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 3, ரவி பிஸ்னோய் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் ஆசிய விளையாட்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்!

கரூரில் போட்டியிடும் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன்..! கூட்ட நெரிசல் வழக்கில் கைதானவர்!
செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!
சினிமாவில் வீழ்ச்சியைச் சந்தித்தது ஏன்? பரத் பதில்!
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

