ஆசிய விளையாட்டு: 100 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

கடந்த 2018ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. 
ஆசிய விளையாட்டு: 100 பதக்கங்களை உறுதி செய்த இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இந்தியா இன்று (அக். 6) 100வது பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 70 பதக்கங்களை வென்றிருந்தது. 

இதனிடையே சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்றுவரும் 19வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 100 பதக்கங்களை வெல்லவுள்ளது. 

ஹாங்சோவ் நகரில் செப். 23 ஆம் தேதி முதல் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

13 ஆவது நாளான இன்று, இந்தியா தனது 91வது பதக்கத்தை வென்றது. ( 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம்) அதோடு மட்டுமின்றி ஆடவர் கிரிக்கெட், கபடி, வில்வித்தை, பேட்மிண்டன் ஆகிய போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதன்மூலம் இந்தியாவுக்கு இப்போதுவரை 102 பதக்கங்கள் வசமாகவுள்ளன. 

குதிரையேற்றம், படகுப்போட்டி போன்றவற்றில் எதிர்பாராதவிதமாக இந்தியாவுக்கு பதக்கங்கள் கிடைத்ததால், நூறு பதக்கங்களுக்கு மேல் பெற முடிந்ததாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com