நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

வில்லியம்சனுக்கு எலும்பு முறிவு உறுதி: மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்த நியூசி.!

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு காயம் உறுதியாகியுள்ளது.

News image
Updated On :14 அக்டோபர் 2023, 9:47 am

DIN

கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். 

இதனால் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியுமா என கேள்வி எழுந்தது. பின்னர் கடின உழைப்புக்குப் பிறகு நியூசிலாந்தின் 3வது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார்.

வில்லியம்சன் 78 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். ரன் ஓடும்போது ஃபீல்டிங்கில் இருந்து பந்தினை வீசும்போது அது வில்லியம்சனின் இடது கையில் பட்டது. இருந்தும் சிறிது நேரம் அணிக்காக விளையாடினார். பின்னர் குறைவான ரன்களே தேவைப்பட்டபோது ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 

Story image

இந்நிலையில் இன்று ஸ்கேன் செய்யப்பட்டப் பிறகு காயம் உறுதியாகியுள்ளது. இது குறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டெட், “ஐபிஎல்-இல் முட்டியில் எற்பட்ட காயத்திலிருந்து கடினமாக உழைத்து இந்த நிலைமைக்கு வந்த கேன் வில்லியம்சனை நினைத்து வருத்தமாக இருக்கிறது. தற்போது ஸ்கேன் செய்ததில் இருந்து வருத்தமளிக்கும் செய்தியே கிடைத்துள்ளது. 

Story image

இடது கை கட்டை விரல் எலும்பு முறிதுள்ளது. ஆனால் எழும்புகள் உடைந்தும் நகரவில்லை. அதனால் சீக்கிரமே குணமாக வாய்ப்புள்ளது. வில்லியம்சனுக்கு இன்னும் சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. உலகின் தலைசிறந்த கிளாசிக் வீரரான வில்லிய்மசனுக்கு இந்த உலகக் கோப்பையில் திரும்பவும் விளையாட வாய்ப்பினை அளிக்கிறோம். கடைசிப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இன்னும் அணியில் இருந்து நீக்கவில்லை. இருந்தபோதிலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பிளண்டலை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளோம். அவரை இன்னும் அதிகாரபூர்வமாக நியூசிலாந்து அணியில் சேர்க்கவில்லை” எனவும் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.