இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையளிப்பவர் விராட் கோலி: ஆப்கன் வீரர் புகழாரம்!

இளம் வீரர்களுக்கு தன்னம்பிக்கையளிப்பவர் விராட் கோலி: ஆப்கன் வீரர் புகழாரம்!

ஆப்கானிஸ்தான் இளம் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஜ் இந்திய வீரர் விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். 
Published on

கடந்த அக்.5ஆம் தேதி முதல்  உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 13வது போட்டியாக இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் விளையாடியது. 

சாம்பியன் அணியான இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை குர்பாஜ் துவம்சம் செய்தார். 57 பந்துகளில் 80 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கும். 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. 

ரஹ்மானுல்லா குர்பாஜ், “விராட் கோலி உலகத்திலுள்ள அனைத்து இளம் வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக் கூடியவர். கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலியை பார்த்து அதிகம் கற்றுக் கொள்ளலாம். எப்படி ஒரு இன்னிங்ஸை தொடங்கி முடிக்க வேண்டும், எப்படி அதிகமான ரன்கள் குவிக்க முடியும் என்பதையும் விளையாட்டு குறித்து சரியான திட்டமிடலையும் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 

34 வயதான விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 13,239 ரன்கள் குவித்துள்ளார். இதில் 47 சதங்கள், 68 அரைசதங்களும் அடங்கும். 

ஆப்கனை சேர்ந்த 21 வயதான ரஹ்மானுல்லா குர்பாஜ் 29 போட்டிகளில் 1,106 ரன்கள் எடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com