மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் குவிப்போம்: பாட் கம்மின்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :19 அக்டோபர் 2023, 10:19 am

பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. இருப்பினும், இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் ஜோஷ் இங்லிஷைத் தவிர மற்ற வீரர்கள் யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் பேட்டிங் என்பது அந்த அணிக்கு கவலையளிக்கும் விஷயமாகவே உள்ளது. ஆஸ்திரேலியா நாளை (அக்டோபர் 20) பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்கள் குவிப்பார்கள் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பெங்களூரு சின்னசுவாமி போன்ற மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்க முடியும் என என்னால் தைரியமாக கூற முடியும். இங்குள்ள விக்கெட் பேட்டிங்குக்கு ஏற்றவாறு இருக்கும். அதனால் இந்த ஆடுகளத்தில் பேட்டிங் மிக முக்கியமாக இருக்கும். இலங்கைக்கு எதிரான கடந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த தொடக்கம் சிறப்பானதாக இருந்தது. மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் முதல் ஓவரிலிருந்தே அணிக்கு சிறப்பாக ரன் குவிக்கத் தொடங்கினர். இதனையே எங்களது வீரர்களிடமிருந்து நான் எதிர்பார்க்கிறேன். அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டியில் கண்டிப்பாக அதிக ரன்கள் குவிப்போம். கடந்த போட்டியில் ஜோஷ் இங்லிஷ் சிறப்பாக விளையாடினார். பேட்டிங் அல்லது ஃபீல்டிங்கை தேர்வு செய்வதில் பனிப்பொழிவு முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.