91/6லிருந்து 221/7 என மீண்ட நெதர்லாந்து: இலங்கை வெற்றிக்கு 263 ரன்கள் இலக்கு! 

91/6லிருந்து 221/7 என மீண்ட நெதர்லாந்து: இலங்கை வெற்றிக்கு 263 ரன்கள் இலக்கு! 

உலகக் கோப்பை லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி 262 ரன்கள் எடுத்துள்ளது. 
Published on

கடந்த அக்.5ஆம் தேதி முதல் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதன் லீக் போட்டியில் 19வது போட்டியாக இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதகின்றன. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

21.2 ஓவரில் 91/6 என இருந்த நெதர்லாந்து பின்னர் 45.1 ஓவருக்கு 221/7 என திடமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இலங்கை அணி தனது வெற்றி வாய்ப்பினை  வீணடித்தது என வரணனையாளர்கள் கருத்து தெரிவித்தனர். 

7வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்காக நெதர்லாந்து அணியின் இங்கில்பிரிச்ட் 70 ரன்களும் லோகன் வன் பீக் 59 ரன்களும் அடித்து இலங்கைக்கு சவாலான இலக்கை நிரணயித்துள்ளார்கள். 

இலங்கை அணி சார்பில் ரஜிதா, மதுஷனாகா தலா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். தீக்‌ஷனா 1 விக்கெட்டு எடுத்தார். 

இலங்கை அணி 3 போட்டிகளிலும் தோல்வியுற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியாலாவது முதல் வெற்றியை பெறுமா என இலங்கை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com