உலகக் கோப்பையில் முதல் முறையாக விக்கெட்டின்றி பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க்!

உலகக் கோப்பையில் முதல் முறையாக விக்கெட் ஏதும்  எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசியுள்ளார்.
உலகக் கோப்பையில் முதல் முறையாக விக்கெட்டின்றி பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க்!

உலகக் கோப்பையில் முதல் முறையாக விக்கெட் ஏதும்  எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்துவீசியுள்ளார்.

உலகக் கோப்பையில் தர்மசாலாவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 5  ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணி 4 வெற்றிகளைப் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 

இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற போதிலும், அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு சிறப்பானதாக அமையவில்லை. இன்றையப் போட்டியில் 9 ஓவர்கள் வீசிய அவர் விக்கெட் ஏதும் எடுக்காமல் 89 ரன்களை வாரி வழங்கினார். உலகக் கோப்பை போட்டி ஒன்றில் விக்கெட் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறையாகும். கடந்த 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகள் இடைவெளியில் உலகக்  கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல் ஸ்டார்க் முதல் முறையாக விக்கெட்டின்றி பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியா சார்பில் உலகக் கோப்பையில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த  பந்துவீச்சாளர் என்ற தனது பழைய விரும்பத்தகாத சாதனையை முறியடித்து மீண்டும் அந்த சாதனைக்கு மிட்செல் ஸ்டார்க் சொந்தக்காரராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com