92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வார்னர், ஹெட் அசத்தல்: நியூசிலாந்துக்கு 389 ரன்கள் இலக்கு!

உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 388/10 ரன்கள் எடுத்துள்ளது. 

News image
Updated On :28 அக்டோபர் 2023, 8:59 am

DIN

கடந்த அக்.5ஆம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் போட்டியின் 27வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

ஆஸி.யின் தொடக்க வீரர்கள் நியூசிலாந்தின் பௌலர்களை அடித்து நொறுக்கினார்கள். 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள் வார்னர்-ஹெட். வார்னர் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் காயத்துக்குப் பிறகு ஆடும் முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடி சதமடித்து 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

Story image

அடுத்து வந்த பேட்டர்கள் சிறப்பாக விளையாடாவிட்டாலும் இறுதியில் மேக்ஸ்வெல்-பாட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடினார்கள். 49.2 ஓவர் முடிவில் ஆஸி. 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

மிட்செல் மார்ஷ்- 36, மேக்ஸ்வெல்- 41, பாட் கம்மின்ஸ் - 37, இங்கிலிஷ்- 37, ஸ்மித்- 18, லபுஷேன் - 18, ஸ்டார்க்- 1, ஜாம்பா - டக் அவுட். 

நியூசிலாந்து அணி சார்பாக க்ளென் பிலிப்ஸ் சிறப்பாக பந்து வீசினார். பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்கள். சான்ட்னர் 2 விக்கெட்டுகளும் மேட் ஹென்றி, ஜிம்மி நீஷம் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

Story image

அதிரடி தொடக்கத்துக்குப் பிறகு 400+க்கு அதிகமான ரன்கள் வரவேண்டிய போட்டியில் நியூசி. சிறப்பாக கம் பேக் கொடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.