பாபர் அசாமின் அழைப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எடுப்பதில்லை: முன்னாள் வீரர்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் அழைப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாகா அஷ்ரஃப் எடுப்பதில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லாட்டிஃப் கூறியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.
பாபர் அசாமின் அழைப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எடுப்பதில்லை: முன்னாள் வீரர்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் அழைப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாகா அஷ்ரஃப் எடுப்பதில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லாட்டிஃப் கூறியுள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் முதல் இரண்டு போட்டிகளைத் தவிர மற்ற போட்டிகள் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைத் தழுவி புள்ளிப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப் பிறகே பாகிஸ்தான் அணியின் மீதான விமர்சனங்களும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் மீதான விமர்சனங்களும் அதிகரித்தன. பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலர் பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் அழைப்புகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாகா அஷ்ரஃப் எடுப்பதில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரஷித் லாட்டிஃப் கூறியுள்ளது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஸாகா அஷ்ரஃப், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிடமிருந்து வரும் அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பதில் அளிப்பதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ஒப்பந்தத்தின்படி வீரர்களுக்கு 4-5 மாதங்களுக்கான ஊதியம் நிலுவையில் உள்ளது. வீரர்கள் அவர்களுக்கான ஊதியத்தினைப் பெறவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பாபர் அசாமின் அழைப்புகளை எடுப்பதில்லை. இந்த நிலையில், பாகிஸ்தானிடமிருந்து எந்த மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றார்.

முன்னதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் வாசிம் அக்ரம், சோயிப் மாலிக் உள்பட பலர் பாபர் அசாமின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com