முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு 292 ரன்கள் இலக்கு!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு 292 ரன்கள் இலக்கு!

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 8) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இங்கிலாந்து முதலில் பேட் செய்தது.

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி ப்ரூக் மற்றும் டேவிட் மலன் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்துக்கு சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும்,டேவிட் மலன் 54 ரன்களிலும், ஹாரி ப்ரூக் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்  களமிறங்கிய ஜோ ரூட் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 6  ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அண்மையில் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பென் ஸ்டோக்ஸ் களம் கண்டார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இருவரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்தனர்.  ஸ்டோக்ஸ் 69 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

அதன்பின், லியம் லிவிங்ஸ்டன் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் 40  பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஜோஸ் பட்லர் 68 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதியில் டேவிட் வில்லே அதிரடியாக 11 பந்துகளில் 21  ரன்கள் குவித்தார். அதில் 2  பவுண்டரிகள் மற்றும்  ஒரு சிக்ஸர் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 2 விக்கெட்டுகளையும், பெர்க்யூசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com