மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஆசியக் கோப்பையை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியம்: ஷுப்மன் கில்

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2023, 11:03 am

DIN

உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், நாங்கள் வெற்றி பெறும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்பது அவசியம். இந்த சூழலில் நாங்கள் ஓரிரு போட்டிகளில் தோல்வியடைந்தால் அது எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடியதாகவே உணர்கிறோம். நாங்கள் 10-15 ரன்கள் அதிகமாக அவர்களை எடுக்க விட்டுவிட்டோம். மற்றபடி, நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (செப்டம்பர் 17) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.