காசியில் கிரிக்கெட் மைதானம்: திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்கள்? 

உத்தரபிரதேசம் வாரணாசியில் செப்.23ஆம் நாள் பிரதமர் மோடி கிரிக்கெட் மைதானதுக்கான அடிக்கல் நட்டு விழாவினை துவங்கிவைக்கிறார்.
காசியில் கிரிக்கெட் மைதானம்: திரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்கள்? 

உத்தரபிரதேசம் வாரணாசியில் ரூ. 450 கோடியில் நவீன வடிவமைப்புடன் 31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க உள்ளார். பிசிசிஐ, யுபிசிஏ இணைந்து இந்தப் பணியை மேற்கொள்ளவுள்ளது.  

இந்த நிகழ்ச்சியில் முக்கியமான நட்சத்திர கிரிக்கெட்டர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் மண்டல மேலாளர் கௌசிக் ராஜ் தெரிவித்துள்ளார். 

பிரபல எல்&டி நிறுவனம் இந்த ஸ்டேடியத்தை உருவாக்க உள்ளது. யுபிசிஏ மற்றும் காற்று, நீர் மாசுபாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று மேற்கொண்டு பணிகள் நடைபெற உள்ளன. ரூ.120 கோடி நிலத்திற்காகவும் ரூ.330 கோடி மைதானம் கட்டமைக்கவும் செலவிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடவுள் சிவனை அடிப்படையாக கொண்டு இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிசூலம் வடிவலான விளக்கு கோபுரங்களும் உடுக்கை வடிவலான மையப் பகுதியும் பிறை நிலா வடிவலான மேற்கூறையும் அமைய உள்ளதாகவும் மாதிரி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

2024இல் இந்த மைதானம் பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com