தோனியின் சாதனை முறியடிப்பு: அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் தாஹிர்! 

சிபிஎல் (கரீபியன் ப்ரீமியர் லீக்) தொடரில் ஜிஏடபிள்யூ அணி கோப்பையை வென்றுள்ளது. 
தோனியின் சாதனை முறியடிப்பு: அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த இம்ரான் தாஹிர்! 

ஜிஏடபிள்யூ (கயானா அமேசான் வாரியர்ஸ்) அணிக்கு 44 வயதான இம்ரான் தாஹிர் கேப்டனாக செயல்பட்டு வந்தார். சிபிஎல்லின் இறுதி போட்டி ஜிஏடபிள்யூ அணியும் பொல்லார்டின் டிகேஆர் (டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) அணியும் மோதின. 

முதலில் பேட்டிங் ஆடிய டிகேஆர் அணி 18.1 ஓவர்களில் 94 ரன்களுக்குள் சுருண்டது. கேஸ் கார்டி மட்டும் 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ட்வையின் ப்ரிடோரியஸ் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அடுத்து ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணி 14 ஓவர்களில் 99 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

5 முறை இறுதிப் போட்டிக்கு சென்ற அமேசான் வாரியர்ஸ் அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது. 10 வருட காத்திருப்பு நிறைவேறியுள்ளது. இம்ரான் தாஹிர் இந்த அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யும்போது பலரும் அவரை கிண்டல் செய்தனர். ஆனால் அஸ்வின் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். 

போட்டி முடிந்தப் பிறகு இம்ரான் தாஹிர், “நான் கேப்டனாக பொருப்பேற்கும்போது பலரும் என்னை கிண்டல் செய்தனர். அது என்னை மேலும் ஊக்கப்படுத்துவதக இருந்தது.  அவர்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.  ஆனால் அப்போதே அஸ்வின் எனக்கு ஆதர்வாக பேசினார். இந்த அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் என கூறினார். அவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” எனக் கூறினார். 

44 வயதில் கோப்பையை வென்ற முதல் வீரராகவும் இருக்கிறார் இம்ரான் தாஹிர். இதன் மூலம் தோனியின் (41 வயதில் ஐபிஎல் கோப்பை) சாதனையை முறியடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com