முக்கிய வீரர்களின்றி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா!

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை.
முக்கிய வீரர்களின்றி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்தியா!

இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளிலும் அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெறமாட்டார் எனவும், ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பட்டியலில் முகமது ஷமி, ஷர்துல் தாக்குர் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் இணைந்துள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை (செப்டம்பர் 27) நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஷுப்மன் கில் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: இந்திய வீரர்கள் பலருக்கு உடல்நிலை சரியில்லை. அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அணியில் இடம்பெறமாட்டார்கள். வீரர்கள் பலர் அவர்களது சொந்த பிரச்னைகளுக்காக வீடு திரும்பியுள்ளனர். சிலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 13  வீரர்கள் மட்டுமே அணியில் இருக்கிறார்கள். ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஷமி, ஷர்துல் மற்றும் பாண்டியா அவர்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். காயம் காரணமாக அக்ஸர் அணியில் இல்லை. அடுத்த சில வாரங்கள் இந்திய வீரர்கள் அனைவருக்கும் முக்கியமான காலக் கட்டம். அதனால் வீரர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று உலகக் கோப்பைக்கு முன்னதாக புத்துணர்ச்சியுடன் உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com